மார்த்தாண்டம் அருகே குளத்தில் தவறி விழுந்த முதியவர் சாவு

மார்த்தாண்டம் அருகே குளத்தில் தவறி விழுந்த முதியவர் இறந்தார்.
மார்த்தாண்டம் அருகே குளத்தில் தவறி விழுந்த முதியவர் சாவு
Published on

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே நெல்வேலி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 88). இவருடைய மனைவி கிருஷ்ணகுமாரி (85). இவர்களுடைய மகன் ரவீந்திரன். காட்டாத்துறை பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ஜெகநாதன் இயற்கை உபாதையை போக்க ஊராக்குளம் பகுதிக்கு சென்றார். அப்போது அவர் குளத்தில் தவறி விழுந்து இறந்தார். இதை காலையில் குளத்தில் குளிக்க சென்றவர்கள் பார்த்து ஜெகநாதன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் குளத்துக்கு சென்று ஜெகநாதன் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுபற்றி ரவீந்திரன் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com