மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

புதுச்சத்திரத்தில் மோட்டா சைக்கிள் மோதியதில் முதியவா உயிழந்தா.
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
Published on

புவனகிரி மணிக்கொல்லை மெயின்ரோட்டை சேர்ந்தவர் வடிவேல் (வயது 80). இவர் சம்பவத்தன்று புதுச்சத்திரம் - பரங்கிப்பேட்டை ரோட்டில் நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வடிவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி அவரது மகன் தனசேகர் புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com