மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் பலி

மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் இறந்தார்
மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் பலி
Published on

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அடையகருங்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுடலை மாடன் (வயது 80). இவர் நேற்று முன்தினம் கடைக்கு செல்வதற்காக சாலையை கடந்தபோது அம்பையில் இருந்து விக்கிரமசிங்கபுரம் நோக்கி வந்த மோட்டார்சைக்கிள் இவர் மீது மோதியது. உடனடியாக அவரை அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த விக்கிரமசிங்கபுரம் பசுக்கடைவிளையைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் சைமன்ராயர் மீது விக்கிரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com