ரெயில் மோதி முதியவர் பலி

மதுக்கரை அருகே ரெயில் மோதி முதியவர் பலியானார்.
ரெயில் மோதி முதியவர் பலி
Published on

மதுக்கரை

கோவை மதுக்கரை-போத்தனூ ரெயில்நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடப்பதாக போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவாகள் அங்கு பிணமாக கிடந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். முதியவர் தண்டவாளத்தை கடந்த போது அந்த வழியாக வந்த ரெயில்மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com