ரெயில் மோதி முதியவர் பலி

ரெயில் மோதி முதியவர் பலியானார்
ரெயில் மோதி முதியவர் பலி
Published on

தஞ்சை வெட்டுக்கார தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 85). இவர் நேற்றுகாலை தஞ்சை வண்டிக்கார தெரு பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சி செய்தார். அந்த நேரத்தில் மயிலாடுதுறையில் இருந்து தஞ்சை நோக்கி வந்த ரெயில் ராஜாங்கம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே தஞ்சை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன், தனிப்பிரிவு ஏட்டு சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜாங்கம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com