ரெயில் மோதி முதியவர் பலி

அரக்கோணம் அருகே ரெயில் மோதி முதியவர் பலியானார்.
ரெயில் மோதி முதியவர் பலி
Published on

அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூர் ரெயில் நிலையம் அருகே திருத்தணி - அரக்கோணம் ரெயில் பாதையின் தண்டவாளம் அருகே 57 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன் மற்றும் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து விசாரணை மேற்கொண்டபோது இறந்து கிடந்தவர் தணிகைபோளூர் பகுதியை சேர்ந்த சேகர் (வயது 57) என்பதும், நேற்று காலை அந்த பகுதியில் சென்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்திருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com