மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
Published on

புதுக்கடை:

புதுக்கடை அருகே உள்ள விழுந்தயம்பலம் பாலக்காவிளையை சேர்ந்தவர் ராஜரத்தினம். இவருடைய மனைவி விமலா (வயது75). கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த விமலா தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். மேலும், இதன்காரணமாக அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். சம்பவத்தன்று விமலா வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விமலாவின் மகன் எட்வின் மோகன்தாஸ் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com