

விழுப்புரம் அருகே சிறுவாலை கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் மனைவி செல்லம்மாள் (வயது 75). இவருடைய கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் நேற்று விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தின் உள்ளே நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ் மோதியதில் செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.