மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு

விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி உயிழந்தா.
மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு
Published on

விக்கிரவாண்டி தாலுகா அடங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி ராணி (வயது 60). இவர் நேற்று முன்தினம் இரவு ஆசாரங்குப்பம் பஸ் நிறுத்தம் அருகில் சாலையை கடக்க முயன்றார். அப்போது கண்டாச்சிபுரத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர், ராணி மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த ராணியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் விபத்தை ஏற்படுத்தியதாக விழுப்புரம் அருகே சாணிமேட்டை சேர்ந்த வினோத் என்பவர் மீது காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com