மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

மின்சாரம் தாக்கி மூதாட்டி பலியானார்.
மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி
Published on

திமிரி

மின்சாரம் தாக்கி மூதாட்டி பலியானார்.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி முத்துகிருஷ்ண முதலியார் தெருவை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 80). இவர் தனது பசு மாட்டை ஓட்டி வருவதற்காக விவசாய நிலத்திற்கு சென்றார் அங்கு மின்சார கம்பத்தில் இருந்த எர்த் ஒயரை அவர் தொட்டபோது திடீரென மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திமிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், அருண்குமார், ஏட்டு சிலம்பரசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com