சரக்கு வேன் மோதி மூதாட்டி பலி

திண்டுக்கல் அருகே சரக்கு வேன் மோதி மூதாட்டி ஒருவர் பலியானார்.
சரக்கு வேன் மோதி மூதாட்டி பலி
Published on

திண்டுக்கல் அருகே குட்டத்துபட்டியை சேர்ந்தவர் சந்தியாகு. இவரது மனைவி ஐனேஸ் அம்மாள் (வயது 77). இவர் நேற்று முன்தினம் அவரது வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஒன்று எதிர்பாராத விதமாக ஐனேஸ் அம்மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com