சாலையை கடக்க முயன்ற மூதாட்டி லாரி மோதி பலி

வேலூர் அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி லாரி மோதி பலி
சாலையை கடக்க முயன்ற மூதாட்டி லாரி மோதி பலி
Published on

வேலூரை அடுத்த செதுவாலையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மனைவி கோவிந்தம்மாள் (வயது 80).

இன்று மாலை 3 மணியளவில் பொய்கை -செதுவாலை இடையே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கோவிந்தம்மாள் கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக கன்டெய்னர் லாரி திடீரென அவர் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த கோவிந்தம்மாளை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com