மதுவிற்ற மூதாட்டி கைது

திருவையாறில் மதுவிற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டார்.
மதுவிற்ற மூதாட்டி கைது
Published on

திருவையாறு பகுதியில் மதுவிற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது திருவையாறை அடுத்த கோனேரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த ராசு மனைவி தனம் (வயது82) என்பவர் மணத்திடல் பாலம் அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து நடுக்காவேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனத்தை கைது செய்து அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com