ஒமைக்ரான் தடுப்பு பணிகள்; உயரதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை

சென்னையில் தலைமை செயலகத்தில் மருத்துவ துறை உயரதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
ஒமைக்ரான் தடுப்பு பணிகள்; உயரதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன. இதேபோன்று ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன்படி, 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் வருகிற 10ந்தேதி வரை திறக்கப்படாது என்று அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, ஜல்லிக்கட்டு திருவிழா என அடுத்தடுத்து பண்டிகைகள் மக்களால் கொண்டாடப்பட உள்ள சூழலில், ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் பற்றி சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ துறை உயரதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com