டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி கட்டுரை போட்டி

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி கட்டுரை போட்டி வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி கட்டுரை போட்டி
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களின் திறமையை வளர்க்கும் பொருட்டு சிவந்தி அறிவியல் குழுமம் செயல்பட்டு வருகிறது. இந்த அறிவியல் குழுமம் சார்பில், பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்காக வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை) முதல் 26-ந்தேதி வரை இணைய வழியில் கட்டுரை போட்டி நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். மாணவர்கள் 'விவசாயத்தில் தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் தங்களது கட்டுரைகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதி ஸ்கேன் செய்து பி.டி.எப். முறையில் 10 எம்.பி. அளவுக்கு மிகாமல் https://forms.gle/JXyMX7HPoszkWZES7 என்ற இணைப்பு வழியாக பதிவு செய்து பங்கேற்பு சான்றிதழ்கள் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், போட்டிகள் பற்றி விவரம் அறிய sivanthiscienceclub@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவோ அல்லது 9566810078 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலா தொடர்பு கொள்ளலாம்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமையில் அறிவியல் குழும உறுப்பினர்கள் வாசுகி, ஜோதி ஸ்டெல்லா, துணை பேராசிரியர்கள் பூரணம், மரியஇருதய சுஜிதா, மோகனபிரியா, ஸ்ரீஜா ஆகியோர் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com