அவன் இல்லாம வாழ முடியாது.. காதலன் தற்கொலை செய்த அதே தேதியில்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

காதலன் தற்கொலை செய்து விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவன் இல்லாம வாழ முடியாது.. காதலன் தற்கொலை செய்த அதே தேதியில்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
Published on

குளச்சல்,

குளச்சல் அருகே உள்ள கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மனைவி புஷ்பம். இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 11 வருடங்களுக்கு முன்பு செல்லத்துரை இறந்து விட்டார். இதற்கிடையே புஷ்பத்தின் 3 மகள்கள் காதலித்து திருமணம் கொண்டனர். இதனால் புஷ்பம் கடைசி மகள் வித்யா (வயது 23) மற்றும் மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளி மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

வித்யா அருகில் உள்ள தென்னைநார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த கம்பெனியில் பணியாற்றிய மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த அருண் என்பவரை காதலித்தார். இவர்களுடைய காதலை பெற்றோரை இழந்த அருணின் உறவினர்கள் ஏற்க மறுத்தனர்.

இதைதொடர்ந்து கடந்த மாதம் 5-ம் தேதி அருண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்றிலிருந்து வித்யா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார். இந்தநிலையில் நேற்று காலை வித்யா வீட்டில் சமையல் வேலைகளை முடித்து விட்டு கழிவறைக்கு சென்றார்.

ஆனால் வெகுநேரமாகியும் அவர் கழிவறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு கழிவறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்ட நிலையில் வித்யா தொங்கி கொண்டிருந்தார்.

உடனே உறவினர்கள் வித்யாவை மீட்டு குளச்சல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குளச்சல் போலீசார், வித்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலன் சென்ற மாதம் தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாங்காமல், அதே தேதியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com