தூத்துக்குடி கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்


தூத்துக்குடி கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
x

கேரள மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை கேரள மக்கள் வாழும் பல்வேறு பகுதிகளில் இன்று கொண்டாடப்படுகிறது.

தூத்துக்குடி

கேரள மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை கேரள மக்கள் வாழும் பல்வேறு பகுதிகளில் இன்று கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையை கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவிகள் ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.

விழாவிற்கு கல்லூரி துணை முதல்வர் எழிலரசி தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை மாணவிகள் கலந்து கொண்டு அத்தப்பூ கோலம் போட்டு, உற்சாகமாக நடனமாடினார்கள். தொடர்ந்து மாணவிகள் தங்களின் பேராசிரியர்களையும் அழைத்து நடனமாட வைத்து மகிழ்ந்தனர்.

1 More update

Next Story