ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் செயல்படும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இயங்காது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக அடுத்த மாதம் செப்டம்பர் 11-ந் தேதியன்று (சனிக்கிழமை) குமரி மாவட்டத்தில் வேலை நாளாக செயல்படும். அன்றைய தினம் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.

இருப்பினும் நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com