

சென்னை,
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 255-வது நினைவு தினத்தையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் முன்னோடிகளில் ஒருவரும், நெற்கட்டாஞ்செவ்வலை ஆண்ட மன்னர் பூலித்தேவரின் தலைசிறந்த படைத்தளபதியாகத் திகழ்ந்து, ஆங்கிலேயப் படைகளை எதிர்த்துப் போரிட்டு வெற்றிகண்ட மாவீரருமான ஒண்டிவீரனின் நினைவு தினம் இன்று.
ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்திற்கு அடிபணியாமல், தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக இறுதிவரை துணிச்சலுடன் போராடி, தமிழினத்தின் பெருமையாகத் திகழ்ந்த மாவீரர் ஒண்டிவீரன் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் நினைவில் கொண்டு போற்றிடுவோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.