சென்னை சிஎஸ்ஐஆர் - எஸ்இஆர்சி மையத்தில் ‘ஒரு நாள் விஞ்ஞானி’ முகாம்: 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

பள்ளி மாணவர்களுக்கான ‘ஒரு நாள் விஞ்ஞானி’ என்ற 5 நாள் சிறப்பு நிகழ்ச்சி கடந்த நவம்பர் 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது.
சென்னை சிஎஸ்ஐஆர் - எஸ்இஆர்சி மையத்தில் ‘ஒரு நாள் விஞ்ஞானி’ முகாம்: 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
மாணவர்கள்
Published on: 

சென்னை,

சென்னை சிஎஸ்ஐஆர் - எஸ்இஆர்சி நிறுவனத்தில் ஒரு நாள் விஞ்ஞானி நிகழ்வு - 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர்-கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி மையம் (சிஎஸ்ஐஆர் - எஸ்இஆர்சி) சார்பில், பள்ளி மாணவர்களுக்கான ‘ஒரு நாள் விஞ்ஞானி’ என்ற 5 நாள் சிறப்பு நிகழ்ச்சி கடந்த நவம்பர் 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது.

மனதின் குரல்

பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையில் உருவான ‘சிஎஸ்ஐஆர்-ஜிக்யாசா 3.0’ திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் வலியுறுத்திய கருத்தின் அடிப்படையில் இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.

வெளிமாநில மாணவர்களும் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில் 9 முதல் 11-ஆம் வகுப்பு வரை பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சென்னை, வேலூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் மராட்டியம் ஆகிய வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் இதில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

வளர்ச்சியடைந்த பாரதம்

நிகழ்ச்சியை எஸ்இஆர்சி இயக்குநர் ஆனந்தவள்ளி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விஞ்ஞானி மகேஸ்வரன் பேசுகையில், நாட்டின் வளர்ச்சியில் அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும், ‘வளர்ச்சியடைந்த பாரதத்தை’ உருவாக்க மாணவர்கள் பொறியியல் துறையில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

செய்முறை பயிற்சி

இந்த 5 நாள் முகாமில் மாணவர்களுக்கு அறிவியல் விரிவுரைகள் மட்டுமின்றி நேரடி செய்முறை பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

• கட்டமைப்புப் பொறியியல்

• மேம்பட்ட கட்டுமானப் பொருட்கள்

• பேரிடர் தடுப்பு மற்றும் மேலாண்மை

புதிய தொழில்நுட்பங்கள்

ஆகிய துறைகளில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து, மையத்தில் உள்ள நவீன ஆய்வகங்களை மாணவர்கள் நேரில் பார்வையிட்டு வியந்தனர். மேலும், சிஎஸ்ஐஆர் நிறுவனத்தின் பிற பிரிவுகளான சிஎஸ்ஐஆர்-சிஇஇஆர்ஐ மற்றும் சிஎஸ்ஐஆர்-என்இஇஆர்ஐ ஆகியவற்றின் புதிய தொழில்நுட்பங்களும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

X