ஒரே குடும்பம்... 3 நீட் வெற்றியாளர்கள்! மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்த சகோதரர்கள்

7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் 3 பேருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
ஒரே குடும்பம்... 3 நீட் வெற்றியாளர்கள்! மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்த சகோதரர்கள்
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குளி பகுதியைச் சேர்ந்தவர் நெசவாளரான ராம்குமார் (வயது 49). இவருடைய மனைவி மங்கையர் திலகம். இந்த தம்பதிக்கு வெங்கட் ஸ்ரீ, அருண், தரண் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் 3 பேரும் வெள்ளாங்குளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தனர். மூத்த மகன் வெங்கட் ஸ்ரீ கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் போதிய மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. இந்த ஆண்டும் அவர் நீட் தேர்வு எழுதியதில் 720-க்கு 440 மதிப்பெண்கள் பெற்றார்.

மருத்துவக் கல்லூரிகளில் இடம்...

இதேபோன்று அவருடைய தம்பிகளான இரட்டையர்கள் அருண், தரண் ஆகியோரும் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்று நீட் தேர்வு எழுதினர். இதில் அவர்கள் முறையே 511 மற்றும் 494 மதிப்பெண்கள் பெற்றனர். இதையடுத்து 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் 3 பேருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. வெங்கட் ஸ்ரீக்கு நாகர்கோவில் பல் மருத்துவக் கல்லூரியிலும், அருணுக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணுக்கு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது. எனவே சகோதரர்களை அனைவரும் பாராட்டினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com