கடலூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் பலி, 10 பேர் காயம்

கடலூரில் கார் - வேன் - லாரி மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் பலி, 10 பேர் காயம்
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சாலையில் எதிர்பாராதவிதமாக கார் - வேன் - லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 10 பேர் இந்த விபத்தில் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இறந்தவரின் உடலை மீட்ட போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

காரைக்காடு அருகே நடந்த இந்த விபத்தில் வேன் கவிழ்ந்து கார் நெறுங்கியதில் தாமஸ் என்பவர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த விபத்து காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com