வாகனம் மோதி ஒருவர் பலி

நாட்டறம்பள்ளி அருகே வாகனம் மோதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வாகனம் மோதி ஒருவர் பலி
Published on

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள மேல்பல்லப்பள்ளி கொயக்கமேடு என்ற பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் கிருஷ்ணகிரி-வேலூர் நோக்கி செல்லும் மார்க்கத்தில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாகச் சென்ற வாகனம் திடீரென அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அந்த வழியாக சென்ற வாகனம் இறந்தவர் உடல் மீது ஏறி சென்றதால் உடல் சிதறி உருக்குலைந்து காணப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிதறி கிடந்த உடலை சேகரித்து வாளியில் போட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com