மறைமலைநகரில் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் போலீசில் சரண்

மறைமலைநகரில் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் போலீசில் சரண் அடைந்தார்.
மறைமலைநகரில் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் போலீசில் சரண்
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 34). செங்கல்பட்டு மத்திய மாவட்ட வன்னியர் சங்க தலைவராக இருந்த அவரை கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி மறைமலைநகரில் டீக்கடையில் டீ குடிக்கும் போது மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்தது.

இந்த கொலை வழக்கில் மறைமலைநகர் போலீசார் 2 பேரை கைது செய்தனர். 4 பேர் சென்னை எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த நிலையில் சிங்கப்பெருமாள் கோவில் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரத் என்கிற கரிபரத் (வயது 35) என்பவர் மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் நேற்று சரண் அடைந்தார். இதனை தொடர்ந்து பரத் என்கிற கரிபரத்தை போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com