ஏரியில் மூழ்கி ஒருவர் சாவு

கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே ஏரியில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார்.
ஏரியில் மூழ்கி ஒருவர் சாவு
Published on

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே உள்ள ஏரியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஏரியில் மூழ்கி இறந்து கிடப்பதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று ஏரியில் மூழ்கிகிடந்த ஆண் நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com