மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து ஒருவர் பலி

மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து ஒருவர் பலியானார்.
மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து ஒருவர் பலி
Published on

ஆவுடையார்கோவில் அருகே லட்சுமிஏந்தல் காராகுடி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற அய்யாக்கண்ணு (வயது 43). இவர் நேற்று திருமயம் அருகே உறவினர் வீட்டு விசேஷத்திற்கு மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் தனது மனைவியை வீட்டிற்கு பஸ்சில் போக சொல்லி விட்டு ரமேஷ் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். தேக்காட்டூர் விலக்கு அருகே வந்த போது, ரமேஷ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com