குடிபோதையில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

சென்னை பெரியமேட்டில் குடிபோதையில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.
குடிபோதையில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு
Published on

சென்னை பெரியமேடு பகுதியில் மைலேடி மாநகராட்சி பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் குடிபோதையில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்ற நபர் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு மாநகராட்சி பூங்காவுக்கு வந்துள்ளார். இந்த நிலையில் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளிக்க சென்றபோது தவறி விழுந்துள்ளார். உடனடியாக அருகிலிருந்த நண்பர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com