நெல்லையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் உயிரிழப்பு

நெல்லையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு முதியவர் பலியானார்.
நெல்லையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் உயிரிழப்பு
Published on

நெல்லை,

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருசிலருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பும் ஏற்பட்டது. இதில் ஒருசிலர் உயிரிழந்து உள்ளனர். நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 2 கொரோனா நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே இறந்து உள்ளனர்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள குன்னக்குடி பகுதியை சேர்ந்த 72 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 5-ந்தேதி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்தது. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அவருக்கு கருப்பு பூஞ்சை தொற்றும் ஏற்பட்டது. கருப்பு பூஞ்சை தொற்றை அகற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடயே, மேலும் சில கொரோனா நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com