ஊட்டி மலை ரெயில் சேவை மீண்டும் துவக்கம்; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

நீலகிரியில் நிலச்சரிவால் நிறுத்தப்பட்டு இருந்த ஊட்டி மலை ரெயில் சேவை மீண்டும் துவக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி மலை ரெயில் சேவை மீண்டும் துவக்கம்; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
Published on

குன்னுர்,

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் ரெயில் பாதையில், அடர்லிக்கும் ஹில்குரோவுக்கும் இடைப்பட்ட பகுதியில் 16வது கிலோ மீட்டரில் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது.

இதனால் கடந்த இரண்டு நாட்கள் ஊட்டி மலை ரெயில் ரத்து செய்யப்பட்டது. ரெயில் பாதையில் கிடந்த மண்ணை, ரெயில்வே பணியாளர்கள் இரவு பகலாக அகற்றினர். இதனையடுத்து இன்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து 180 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஊட்டி மலை ரெயில் புறப்பட்டு சென்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com