

சென்னை,
சட்டசபையில் 4 நாட்கள் நடந்த பட்ஜெட் மீதான விவாதங்களில் பங்கேற்று பேசிய உறுப்பினர்களுக்கு பதில் அளித்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று பேசினார். பட்ஜெட்டை பாராட்டிய அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், பத்திரிகைகளுக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது அவர், தினத்தந்தி 15-2-2020-ம் நாளிட்ட இதழில், கடுமையான நிதி பற்றாக்குறை இருந்தாலும், புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. வளர்ச்சித் திட்டங்கள், வேளாண் திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், சமூக நலத் திட்டங்கள், உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள துணிச்சலான பட்ஜெட் என்றும், நிர்பயா நிதியின்மூலம் அனைத்து பஸ்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்ற அறிவிப்பு பெண்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யும்.
புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் பல திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் தினத்தந்தி நாளிதழ் பாராட்டியுள்ளது. இதுபோல பல தமிழ் நாளிதழ்களும், ஆங்கில நாளிதழ்களும் நிதிநிலை அறிக்கை மீதான தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ளன. மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, ஆக்கபூர்வமான கருத்துகளை தெரிவித்த அனைவருக்கும், எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.