தென்காசியில் புதிய குடிநீர் தொட்டி திறப்பு

தென்காசியில் ரூ.6 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய குடிநீர் தொட்டி திறக்கப்பட்டது.
தென்காசியில் புதிய குடிநீர் தொட்டி திறப்பு
Published on

தென்காசி 23-வது வார்டு முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் நகராட்சி சார்பில் ரூ.6 லட்சம் செலவில் ஆழ்குழாய் கிணறு மற்றும் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இதனை நகரசபை தலைவர் சாதிர் நேற்று மாலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பாலமுருகன், என்ஜினீயர் கண்ணன், கவுன்சிலர்கள் சுனிதா, சுப்பிரமணியன், நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி, ம.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் வெங்கடேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com