பள்ளிகள் திறப்பு; பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை: பள்ளி கல்வி அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் நாளை திறக்கவுள்ள சூழலில் பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை என பள்ளி கல்வி அமைச்சர் பேட்டியில் கூறியுள்ளார்.
பள்ளிகள் திறப்பு; பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை: பள்ளி கல்வி அமைச்சர் பேட்டி
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள சூழலில், நாளை முதல் (செப்டம்பர் 1) 9 முதல் 12 வரையிலான வகுப்புகளை திறக்க அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டது. இதனை முன்னிட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறை நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு பள்ளிகள் திறக்க தயாராகி வருகின்றன.

இந்த சூழலில், பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து இன்று பேசினார். அவர் கூறும்போது, 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் நாளை திறக்கப்படவுள்ளன. வகுப்புகள் காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறும்.

பெற்றோர்கள் தயக்கமின்றி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை.

1 முதல் 8 வரை பள்ளிகள் செயல்படாத நிலையில், அந்த வகுப்பறைகளை பயன்படுத்தி கொள்ளலாம். வகுப்பறையில் முனைக்கு ஒருவர் என ஒரு பெஞ்சில் மொத்தம் 2 மாணவர்களே அமர அனுமதிக்கப்படுவார்கள்.

மாணவர்கள் முக கவசம் அணியவில்லை என்றாலோ அல்லது அணிந்து வந்த முக கவசம் கிழிந்து விட்டோலா தலைமை ஆசிரியர் அந்த மாணவருக்கு வேறு புதிய முக கவசம் ஒன்றை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com