திடக்கழிவு மேலாண்மை பூங்கா திறப்பு

கடையம் அருகே திடக்கழிவு மேலாண்மை பூங்கா திறக்கப்பட்டது.
திடக்கழிவு மேலாண்மை பூங்கா திறப்பு
Published on

கடையம்:

கடையம் அருகே வெங்காடம்பட்டி ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பூங்கா திறப்பு நிகழ்ச்சி நடந்தது. கடையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) திருமலை முருகன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சித்ராபாபு, வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய மேற்பார்வையாளர் கார்த்திகேயன், திடக்கழிவு மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், மக்கள் நல பணியாளர் மயிலரசன், அரசு ஒப்பந்ததாரர் குமார், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com