சேலம் கோட்டத்தில் இருந்து150 சிறப்பு பஸ்கள் இயக்கம்

விநாயகர் சதுர்த்தியைமுன்னிட்டு சேலம் கோட்டத்தில் இருந்து 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சேலம் கோட்டத்தில் இருந்து150 சிறப்பு பஸ்கள் இயக்கம்
Published on

சிறப்பு பஸ்கள்

சேலம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வார இறுதி நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டம் மூலம் பல்வேறு வழித்தடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 19-ந் தேதி வரை பயணிகளின் தேவைக்கு ஏற்ப 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, சேலம் புதிய பஸ் நிலையம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

சென்னை-மதுரை

இதேபோல், சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை மற்றும் பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி மற்றும் மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. எனவே, பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பாக பயணம் செய்யுமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com