

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று துபாய் புறப்பட்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் புறபட்டார். சென்னை விமான நிலையம் வந்த உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் மழை பாதிப்பு குறித்து கேள்வி எழுப்பினர். எனினும், அது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்காமல் உதயநிதி ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
உதயநிதியின் துபாய் பயணத்தை ஆளுங்கட்சியான தவெக கடுமையாக விமர்சித்துள்ளது. சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்காமல், உதயநிதி துபாய்க்கு சென்றுவிட்டதாக எக்ஸ் பதிவை வெளியிட்டு உள்ளது. உதயநிதியின் துபாய் பயணத்தை ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.