‘சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் துறை சார்ந்த கேள்விகளை எழுப்புவதில்லை’ - அமைச்சர் விஜய் பாலாஜி

கடந்த ஆட்சியில் செய்த தவறுகளை மறைக்க புதிய பிரச்சினைகளை உருவாக்குறார்கள் என அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்துள்ளார்.
‘சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் துறை சார்ந்த கேள்விகளை எழுப்புவதில்லை’ - அமைச்சர் விஜய் பாலாஜி
Published on

ஈரோடு,

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் துறை சார்ந்த கேள்விகளை எழுப்புவதில்லை என அமைச்சர் விஜய் பாலாஜி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-

“சட்டமன்றத்தில துறை சார்ந்த கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்கவில்லை, முதல்-அமைச்சரும் பதில் அளிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளனர். துறை சார்ந்த கேள்விகளாக இருந்தால் பரவாயில்லை. அவர்கள் சம்பந்தமே இல்லாத கேள்விகளை எல்லாம் கேட்கிறார்கள். எதிர்க்கட்சிகள் துறை சார்ந்த கேள்விகளை எழுப்புவதில்லை.

கடந்த ஆட்சியில் அவர்கள் செய்த தவறுகளை மறைப்பதற்காக புதிது புதிதாக பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் அவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் சட்டமன்றத்தில் அமைச்சர்கள் பதிலளித்துள்ளார். முதல்-அமைச்சர் பேச வேண்டிய நேரத்தில் நிச்சயமாக பேசுவார். கொளத்தூரில் எங்கள் தலைவர் விஜய் கொஞ்ச நேரம் பேசிய பேச்சுக்கே என்ன நடந்தது என்று தமிழ்நாடு மக்களுக்கு தெரியும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com