புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு: மீனவர்கள் இன்று ஆலோசனை கூட்டம்

9 மீனவ கிராமங்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் இந்த அரசாணையைத் திரும்பப்பெற வலியுறுத்தி போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என மீனவ சங்க வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு: மீனவர்கள் இன்று ஆலோசனை கூட்டம்
Published on

சென்னை,

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க முள்ளிக்குப்பம்- சீனிவாசபுரம் மற்றும் முள்ளிமாநகர் மீனவ கிராம பஞ்சாயத்து சபை சார்பில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம் பட்டினப்பாக்கம் முள்ளிக்குப்பம் சமூக நலக் கூடம் எதிரில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட எண்ணூர் நெட்டுக்குப்பம் முதல் நைனார்குப்பம் வரையுள்ள அனைத்து மீனவக் கிராம நிர்வாகிகளும், பொதுமக்களும் பங்கேற்க உள்ளனர். 9 மீனவ கிராமங்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் இந்த அரசாணையைத் திரும்பப்பெற வலியுறுத்தி போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என மீனவ சங்க வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com