3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட உத்தரவு - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமைச்செயலாளர் கடிதம்

3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட உத்தரவிடுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கடிதம் எழுதியுள்ளார்.
3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட உத்தரவு - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமைச்செயலாளர் கடிதம்
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 11,13,502 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மேலும் 4,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 3,18,614 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூடுவதற்கு தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ராஜீவ் ரஞ்சன் கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com