கந்து வட்டி கொடுமை; நடிகை புகார் மனு பற்றி விசாரணை நடத்த உத்தரவு

சென்னை போரூர் அருகே உள்ள ஆலப்பாக்கத்தில் வசிப்பவர் ஆனந்தி (வயது 25). இவர் தாமரை உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கந்து வட்டி கொடுமை; நடிகை புகார் மனு பற்றி விசாரணை நடத்த உத்தரவு
Published on

சென்னை,

நடனக்கலைஞராக இவரது கணவர் உள்ளார். இவர் தனது உறவினர்களிடம் ரூ.5 லட்சம் கடனாக வாங்கினாராம்.

இதற்கு வட்டியாக ரூ.1.80 லட்சம் கொடுத்து விட்டாராம். ஆனால் காலியான வங்கி காசோலையில் இவர் கையெழுத்து போட்டதை பயன்படுத்தி, தற்போது ரூ.30 லட்சம் மதிப்புள்ள வீட்டை எழுதிக்கேட்டு மிரட்டுகிறார்களாம். ஆசிட் வீசி விடுவதாகவும் பயமுறுத்துவதாக தெரிகிறது. இதுதொடர்பாக வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நேற்று காலையில் நடிகை ஆனந்தி தனது கணவரோடு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அவர் கொடுத்த புகார் மனு மீது விசாரணை நடத்த மதுரவாயல் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

புகார் மனு கொடுத்துவிட்டு வெளியே வந்த நடிகை ஆனந்தி நிருபர்களிடம் கூறுகையில்; தனது புகார் மனு மீது கந்து வட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என்று குறிப்பிட்டார்.

ஆனால் நடிகை ஆனந்தி கொடுத்த புகார் மனுவில் உண்மை இல்லை என்றும், அவரது புகார் தொடர்பாக போலீஸ் விசாரணையை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவரது உறவினர்கள் நிருபர்களுக்கு செல்போன் மூலம் பேசி கருத்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com