கள்ளக்குறிச்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா.
கள்ளக்குறிச்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜேந்திரன், மணிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டப்படி மாத சம்பளம் ரூ.13 ஆயிரத்து 848 வழங்க வேண்டும், தூய்மை பணியாளருக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தில் ரூபாய் 11 ஆயிரத்து 848 மற்றும் சம்பளம் வழங்க வேண்டும், இதரப்படிகள், கொரோனா ஊக்கத்தொகை உள்ளிட்ட நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பட்டது. இதில் நிர்வாகிகள் பிரகாஷ், வெங்கடேஷ், சக்திவேல், அண்ணாமலை, துக்கைமுத்து, மாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com