சட்டத்துறையின் முதல் பெண் செயலாளராக ப.சுமதி நியமனம்

சட்டத்துறையின் செயலாளர் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை ப.சுமதி பெற்றுள்ளார்.
சட்டத்துறையின் முதல் பெண் செயலாளராக ப.சுமதி நியமனம்
Published on

சென்னை,

சட்டத்துறையின் முதல் பெண் செயலாளராக ப.சுமதி நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

சட்டத்துறையின் செயலாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த சி.ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு பணியிலிருந்து 31.05.2026 அன்று ஓய்வு பெற்றார்.

அவரது ஓய்வைத் தொடர்ந்து, மாநில சட்ட ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் செயலாளராக பணியாற்றி வந்த ப.சுமதி, 02.06.2026 முதல் சட்டத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நியமனத்தின் மூலம், ப.சுமதி சட்டத்துறையின் செயலாளர் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார். இது சட்டத்துறையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com