தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.7,500இல் இருந்து ரூ.10,000ஆக உயர்வு - தமிழக அரசு

தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை ரூ.7,500இல் இருந்து ரூ.10,000ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.
தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.7,500இல் இருந்து ரூ.10,000ஆக உயர்வு - தமிழக அரசு
Published on

சென்னை,

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆசிரியர்களும் பங்கேற்றுள்ளதால், அரசு பள்ளிகள் குறிப்பாக தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தில் தொடக்க கல்வி ஆசிரியர்கள் அதிக அளவில் பங்கேற்று உள்ளனர். பெரும்பாலான ஆரம்ப பள்ளிகளில் வெறும் 2 ஆசிரியர்களே உள்ளனர்.

அவர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதால் பள்ளிகளை கடந்த சில நாட்களாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்கலாம் என அரசு முடிவு செய்தது. அதன்படி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக முதன்மை, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.7,500இல் இருந்து ரூ.10,000ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com