

திருச்சி,
புதிய நெல் கொள்முதல் பருவம் தொடங்கியுள்ள போதிலும், போக்குவரத்து ஒப்பந்தத்தில் நிலவும் ஏக போக ஆதிக்கத்தால் நெல் மூட்டைகளை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக டெல்டா விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.உள்ளூர் வாகனங்களை பயன்படுத்தவோ அல்லது மாவட்ட அளவில் ஒப்பந்தங்களை கோரவோ அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட் டங்களில் கொள்முதல் நிலையங்களில் இருந்து கிடங்குகளுக்கு நெல் ஏற்றிச் செல்லும் லாரி இயக்கத்துக்கான மாநில அளவிலான ஒப்பந்தத்தை மன்னார் குடியைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் பெற்றுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கசெயலாளர் சுவாமி மலை சுந்தர விமலநாதன் கூறுகையில்,
அனைத்து அரசியல்கட்சிகளுடனும் செல்வாக்கு வைத்துள்ள இந்த ஒப்பந்ததாரர் முறையான வாகனங்கள் வைத்திருக்கவில்லை என்றும், இதனால் போக்குவரத்து தாமதமடைவதாகவும் தெரிவித்தார். இவர் உள்கான்ட்ராக்ட் மூலம் லாரிகளை இயக்குவதாகவும், லாரிஉரிமையாளர்கள் கேட்கும் கூடுதல் தொகையை கொள்முதல் நிலைய பணியாளர்கள் தாங்கள் வழங்காமல் விவசாயிகளிடம் வசூலிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
அவர் ஒவ்வொரு பருவத்திலும் இந்தபிரச்சினையை எழுப்பி வருவதாகக் கூறிய அவர், விவசாயிகளிடம் உள்ள சொந்த டிராக்டர்களை பயன்படுத்தி வாடகைக்கு நெல் ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், ஏசுபோக ஒப்பந்த முறையை ரத்து செய்து மாவட்ட வாரியாக டெண்டர் கோர வேண்டும் என்றார். ஒரு மாவட்டத்திற்கு ஒவ்வொரு நாளும் குறைந்தது 2000 லாரிகள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போக்குவரத்து வசதி இல்லாததால் கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்குவதாகவும், இதனால் முந்தைய நெல் மூட்டைகள் அகற்றும் வரை புதிய நெல்லை கொள்முதல் செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
இதற்கிடையே, இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர்,ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விரைந்து அகற்ற அர உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், போக்குவரத்து பணிகள் வேகம் பெற்றுள்ளதால் அடுத்த வாரத்திற்குள் நிலைமை சீராகும் என்றும் அவர் உறுதி அளித்தார்.