கம்பத்தில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

கம்பத்தில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கம்பத்தில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கம்பத்தில் உள்ள கம்பம்மெட்டு காலனியை சேர்ந்தவர் ஜாபர்சாதிக் (வயது 56). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மன்சூர்பேகம். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் 2 பேரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால் ஜாபர்சாதிக்கும், அவரது மனைவியும் தனியாக வசித்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே மன்சூர்பேகம் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ஜாபர்சாதிக், நேற்று வீட்டில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com