ரெயிலில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் பலி

ரெயிலில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.
ரெயிலில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் பலி
Published on

விக்கிரவாண்டி, 

சென்னை அமஞ்சிகரை பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 47), பெயிண்டர். இவர் தனது நண்பர் முனியன் என்பவருடன் தென்காசியில் பெயிண்டு வேலை செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டார். இந்த ரெயில் விழுப்புரம் மாவட்டம் பேரணிக்கும், விக்கிரவாண்டிக்கும் இடையே சென்றபோது, ரெயிலில் இருந்து செல்வம் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் செங்கல்பட்டு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமுதாய் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com