பாகிஸ்தான் கொடி எரிப்பு: நெல்லையில் பரபரப்பு

ஜம்மு காஷ்மீர், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கும் விதமாக திருநெல்வேலியில் பாகிஸ்தான் கொடியை எரித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தான் கொடி எரிப்பு: நெல்லையில் பரபரப்பு
Published on

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சுற்றுலா தளமான பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த பயங்கரவாத செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த பயங்கரவாத செயலைக் கண்டித்து, தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் கொடியை தீயிட்டு எரித்த சம்பவம் திருநெல்வேலியில் நடந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், அம்பை கீழரதவீதியில் வஜ்ரசேனா என்ற அமைப்பினர் நேற்று நள்ளிரவில் திடீரென பாகிஸ்தான் கொடியை தீயிட்டு எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து பாகிஸ்தானுக்கு எதிரான கோஷங்களை அவர்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com