பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் - மதுரை ஆதீனம் பேட்டி


பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் - மதுரை ஆதீனம் பேட்டி
x
தினத்தந்தி 27 April 2025 10:30 PM (Updated: 28 April 2025 7:31 AM)
t-max-icont-min-icon

ஜவகர்லால் நேரு ஆட்சி காலத்தில் பல இடங்களை இழந்துள்ளோம் என்று மதுரை ஆதினம் கூறினார்.

மதுரை,

மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள மதுரை ஆதீன மடத்தில் தனியார் மருத்துவமனையுடன் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. அதனை மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமி தொடங்கி வைத்து அவரது உடல் எடை, ரத்த பரிசோதனை செய்து கொண்டார்.

பின்னர் மதுரை ஆதீனம் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்கள் அனைவரும் உடல் நலனை பாதுகாக்க வேண்டும். இலவச மருத்துவமனை அமைக்க திட்டமிட்டுள்ளேன். பாகிஸ்தானை தனிமைப்படுத்தி உலக நாடுகளுடன் எந்த தொடர்பையும் ஏற்படாத வண்ணம் செய்ய வேண்டும். வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இன்றைக்கு மத தீவிரவாதத்தில் ஈடுபடுவது பாகிஸ்தான். அதனை தூண்டி விடுவது சீனா. செல்போனில் நல்ல கருத்துகளை பார்க்கவேண்டும், ஆனால் சினிமா மோகத்தால் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தலைமுறையினர் சினிமா மோகத்தில் சிக்கியுள்ளனர்.

நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய்யை பற்றி பேச விரும்பவில்லை. காஷ்மீர் விவகாரத்தில் தற்போதைய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.

ஜவகர்லால் நேரு ஆட்சி காலத்தில் பல இடங்களை இழந்துள்ளோம். இந்த முறை சரியான பதில் அடி கொடுப்பார்கள். நல்லவராக இருப்பதைவிட வல்லவராக இருக்க வேண்டும். அந்த வகையில் நம்பர் ஒன் பிரதமராக மோடி உள்ளார். பாரத நாடு என்றைக்கும் சமாதானத்தை தான் விரும்புகிறது. ஆனால் தூங்குகின்ற புலியை இடறிவிட்டால் ஏற்படும் விளைவை பாகிஸ்தான் கட்டாயம் அனுபவிக்கும்.

இன்றைக்கு உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு தான் ஆதரவாக நிற்கிறது. தீவிரவாதிகளை வளர்ப்பது பாகிஸ்தானில் தான். அவர்களை தூண்டி விடுவது சீனா தான். அவர்களுக்கு தண்ணீரை வழங்க கூடாது யார் கூறினாலும் சரி. மனிதாபிமானத்தின் படி தண்ணீர் தருவது சரிதான். ஆனால் அவர்களுக்கு மனிதாபிமானம் இல்லை. தீவிரவாதத்துக்கு எதிராக நதிநீரை நிறுத்துவது சரியானதுதான். அவர்கள் இந்தியர்களை சுட்டு வீழ்த்துகிறார்கள். பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி வழங்க வேண்டும். வாஜ்பாய் ஆட்சியின் போது கொடுத்த பதிலடியை போன்று இந்தமுறையும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story