பால மேடு ஜல்லிக்கட்டு முதல் சுற்று முடிவடைந்தது 77 காளைகள் இறங்கின 5 பேர் காயம்

ல மேடு ஜல்லிக்காட்டு முதல் சுற்று முடிவடைந்தது 77 காளைகள் இறங்கின 5 பேர் காயம் அடைந்து உள்ளனர்.#PalameduJallikattu #Jallikattu
பால மேடு ஜல்லிக்கட்டு முதல் சுற்று முடிவடைந்தது 77 காளைகள் இறங்கின 5 பேர் காயம்
Published on

மதுரை

மாட்டுப் பொங்கல் தினமான இன்று பால மேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதற்காக அங்குள்ள மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் உள்ள வாடிவாசல் அலங் கரிக்கப்பட்டு இருந்தது. காலை 8.25 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

கலெக்டர் வீரராகவராவ் முன்னிலையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் போட்டியை தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், மூர்த்தி மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர் போட்டி தொடங்கியவுடன் முதலில் மகாலிங்க சுவாமி கோவில் காளைகள் அவிழ்த்து விடப் பட்டன. இதனை யாரும் பிடிக்க வில்லை. அதன்பின் மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

பாலமேட்டில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி வண்ணன் தலைமையில் ஆயிரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இன்று பால மேட்டில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பே வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. பாலமேடு, அலங்காநல்லூரில் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை பறக்கும் காமிரா மூலம் போலீசார் கண்காணித் தனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டில் 1080 காளைகள், 1188 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.பாலமேடு ஜல்லிக்கட்டில் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் மாடுபிடி வீரர்கள் எடுத்து கொண்டனர்.பாலமேடு ஜல்லிக்கட்டின் ஊர் மரியாதை பெற கூடிய கோயில் காளைகளின் ஊர்வலம் துவங்கியது.

முதல் சுற்ரில் 77 காளைகள் இறக்கபட்டன.5 பேர் காயம் அடைந்தனர்.விதிகளை மீறியதாக 2 மாடுபிடி வீரர்கள் வெளியேற்றபட்டனர்..

பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிகளவிலான காளைகள் பங்கேற்க உள்ளதால், போட்டியின் நேரத்தை நீட்டிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

#Jallikattu2018 | #PalameduJallikattu #Jallikattu #pongal

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com