பழனி பாதயாத்திரை பக்தர் பலி

பட்டிவீரன்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பழனி பாதயாத்திரை பக்தர் ஒருவர் பலியானார்.
பழனி பாதயாத்திரை பக்தர் பலி
Published on

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் குமார். இவர் தலைமையில் அதே பகுதியை சேர்ந்த நெசவுத்தொழிலாளியான ரெங்கராஜ் (வயது 42) என்பவர் உள்பட 52 பேர் ராஜபாளையத்தில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக வந்து கொண்டிருந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் வத்தலக்குண்டு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டுப்பட்டி பிரிவு என்னுமிடத்தில் நடந்து வந்தனர். அப்போது சித்தையன்கோட்டை அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த கணேசன் (27) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ரெங்கராஜ் மீது மோதியது. படுகாயம் அடைந்த அவரை பக்தர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ரெங்கராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com