பழனி பாதயாத்திரை பக்தர் பலி

சாணார்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பழனி பாதயாத்திரை பக்தர் ஒருவர் பலியானார்.
பழனி பாதயாத்திரை பக்தர் பலி
Published on

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 70). இவர் பழனிக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்தார். நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் திண்டுக்கல் -நத்தம் சாலையில் சாணார்பட்டி அருகே அதிகாரிபட்டி என்னுமிடத்தில் அவர் நடந்து சென்றார். அப்போது தோப்பூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 20) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்துராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com